Dharbai தர்பை
தர்ப்பையும், ரகசியமும். *நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம், நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே!* நாம் அவற்றின் காரணத்தை உணராமல், அவற்றை நவீன கண்டு பிடிப்புகளுடன் ஒப்பிட்டு, அதன் எளிமையான பயன் பாட்டையே நாம் புறக்கணிக்கிறோம்... அப்படி நமது முன்னோர்கள் வகுத்த வாழ்வியல், மருத்துவம், நெறியில், ஒரு சூட்சுமான செயல்பாடு தான் தெய்வீகமான தர்ப்பை புல் பயன்பாடு. தர்ப்பை புல் மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாக, வேதங்களின் மூலம் அறியப்படுகிறது... உலகம் தோன்றிய போதே தோன்றிய தொன்மையான புல் என தர்ப்பை புல்லை முன்னோர்கள் போற்றுவர். அனைத்து தெய்வீக பூஜை வழிபாடு செய்யக்கூடிய தர்ப்பை புல்லின் உச்சியில் சிவபெருமானும், மத்தியில் பிரம்மனும், அடியில் மகா விஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம்... தர்ப்பை புல் காய்ந்தாலும், அதன் தன்மை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் என்பதே தர்ப்பை புல்லின் சிறப்பாகும். தர்ப்பை புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது, நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது. இந்து சமய சடங்குகளில், பிறப்பில் இருந்து கடைசி இறப்பு வரை முக்கிய இடம்...