4 நான்கு நாலு Four
4 4 4 4 .....அப்படி என்னதான் இந்த ‘நாலு’க்குரிய சிறப்பு....????? 01. ‘நாலு’ பேரு ‘நாலு’ விதமா பேசுவாங்க. 02. ‘நாலு’ பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 03. ‘நாலு’ காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....???? 04. ‘நாலு’ ஊரு சுற்றினாதான் உலகம் புரியும். 05. அவரு ‘நாலு’ம் தெரிஞ்சவரு., ‘நாலு’ம் புரிஞ்சவரு. 06. ‘நாலு’ வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும். ஏன் இந்த ‘நாலு’ மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்.... சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என ‘நான்கு’ வரும். நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்.... “பாலும்., தெளிதேனும்., பாகும்., பருப்பும் இவை ‘நாலு’ம் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் ‘நால்’வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல். நாலும்., இரண்டும் சொல்லுக்குறுதி... இதில் ‘நாலு’ என்பது.. நாலடியார்.... “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது ‘வேதம் நா...