8 எட்டு
https://www.youtube.com/watch?v=tSspKHYbPo4 எட்டுக்கு இணை ஏதுமில்லை! எட்டாம் நம்பர் சிறப்பு!!: நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம். அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும். நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள். இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம். அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது. சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும். எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும். எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும். மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக...