ஜபம் மந்திரம்
https://youtu.be/W60rC2ZumOE https://youtu.be/gZB_2aSzn94 மூன்று வகை அழுக்குகள் மன அழுக்கு 2. வாய் அழுக்கு 3. உடம்பு அழுக்கு என அழுக்குகள் மூன்று வகை. பொறாமை, பகை, கோபம், ஆசை என்பன மனத்தால் ஏற்படும் அழுக்குகள். இவற்றைத் தியானம் என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். பொய் சொல்வது, அடுத்தவனைப் பற்றிப் புறம் சொல்லித் திரிவது, கோள் சொல்வது, தீமையான சொற்களைப் பேசுவது, தெய்வத்தைப் பழிப்பது, ஞானிகளைப் பழிப்பது, நல்ல பெண்களைப் பழிப்பது ஆகியவை வாயால் ஏற்படும் அழுக்குகள். இறைவனைப் பற்றிய மந்திரங்கள், தோத்திரப்பாடல்கள் பாடி இந்த அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும். கொலை, களவு, பிறா் மனைவியோடு தகாத உறவு முதலியவை உடம்பால் ஏற்படும் அழுக்குகள். அவற்றை அர்ச்சனை என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். மந்திர ஜபம்: ஏற்ற இடங்கள்: வீட்டிலிருந்து ஜபித்தால் ஒருமுறை உருவேற்றியதாகும். பசுக்கொட்டிலிலிருந்து ஜபித்தால் ஒன்று நூறு ஆகும். நந்தவனத்திலிருந்து ஜபித்தால் ஒன்று ஆயிரமாகும். மலைமேலிருந்து ஜபித்தால் ஒன்று பதினாயிரம் ஆகும் நதிக்கரையிலிருந்து ஜபித்தால் ஒன்று லட்சம் ...