Posts

Showing posts from October, 2024

ருண விமோசன பிரதோஷம்

ருண விமோசன பிரதோஷம் நாம் முற்பிறவியில் பட்ட கடன்களைத் தீர்க்கவே மறுபடியும் பிறக்கிறோம் என்பது சாஸ்திரம் சொல்லும் பிறவி ரகசியம். ஆனால், பட்டகடனை தீர்க்க வேண்டி மறுபடியும் பிறக்கும் நாம், மேலும் மேலும் கடனாளியாகி, முடிவில்லாத பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறோம். கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற அளவுக்கு இன்றைய பொருளாதார ச் சூழல் உருவாகிவருகிறது. பேராசையும், பொருள்களை வாங்கிக் குவிக்கும் மனோ பாவமும் ஒவ்வொருவரையும் கடன்காரரா க மாற்றிவருகிறது. 'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சொல்வார்கள். நாளும் கடன் பிரச்னைகளால் கலங்கித் தான் வருகிறோம். இதோ நமது பிறவிக் கடன், பொருளாதாரக்கடன் எல்லாவற்றை யும் போக்க உதவும் திருநாள். செவ்வாய்க்கிழமையன்று வரும் பிரதோஷம்,  'ருண விமோசன பிரதோ ஷம்’ என்று அழைக்கப்படுகிறது. 'ருண’ என்றால் கடன். கடன் தொல்லைகளில் இருந்து விமோசனம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற உள்ளது. செவ்வாய் பகவான் ருண ரோகத்துக்கு காரக த்துவம் வகிப்பவர். இவரே கடன் தொல்லை உண்டாகவும் அவரை வழிபட்டால் கடன்களை த் தீர்க்கவும் அருளுவார். செவ்வாய்க்கிழமை அன்று வ...