சூரியன் கண்கண்ட தெய்லம்
ஞாயிற்றுக்கிழமை. சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' என்பது ஆன்றோர்கள் வாக்கு.
வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம். வேதங்கள் சூரியனை 'ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்' என்று போற்றுகின்றன. நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் 'உச்சிகிழான் கோட்டம்' என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.
சூரியவழிபாடு அவசியம்.
சூரியன் பிரத்யட்ச மான தெய்வம். எல்லாருமே கண்களால் கண்டு வணங்கக்கூடிய தெய்வம். சூரிய வழிபாடு அனைவருக்கும் பொதுவான வழிபாடு. உலக உயிர்கள் அனைத்தையும் தன் ஒளியினால் வாழவைப்பவர் சூரியன்.
சூரியனை விச்வரூப விராட்புருஷனாகிய விஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றி வந்தவர் என்று சொல்வார்கள். அந்த ஆதிபுருஷனுடைய நேத்திரம் சூரியன் என போற்றப் படுவதாலேயே சூரியன் நமது கண்களுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருக்கிறார்.
ஆஞ்சனேய சுவாமி சூரியனுடன் சஞ்சரித்துக் கொண்டே ஞானோபதேசம் பெற்று "நவவியாகரண பண்டிதன்' என்ற பெருமையைப் பெற்றார். மகரிஷி யாக்ஞ வல்கியர் சூரியனை உபாசித்து சுக்ல யஜுர் வேதத் தைக் கற்றார் என்பதை அறிய முடிகிறது. திரேதாயுகத்தில் சூரியனைதான் முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.
சூரியனுக்கென்று சிறப்புப் பெற்ற ஆலயங்களும் இருக்கின்றன. கும்பகோணத் திற்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் விசேஷமானது.
மாதங்கள்தோறும் சூரியன்...
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரிய பகவான் ஒவ்வொரு திருநாமம் கொண்டு நம்மைக் காத்துவருகிறார் என்று வேதங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் திருநாமம் கொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார்.
புரட்டாசியில் வருணன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருகிறார்.
ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஜொலிக்கிறார்.
துதிகளில் எல்லாம் சிறந்த தான ஆதித்ய ஹ்ருதயம் எனும் மந்திரத்தை நாளும் ஓதி பாவங்களையும், கவலைகளை யும், குழப்பங்களையும் நீக்கிக் கொள்வோம். வாழ்நாளை நீட்டிக்கும், வளங்களை அளிக்கும் சூரிய பகவானை எப்போதும் போற்றுவோம்.
Comments
Post a Comment