கண் திருஷ்டி Eye sight with ad thoughts
கண் திருஷ்டி எல்லாவற்றிலும் தடையை ஏற்படுத்துகிறதா? திருஷ்டி நீங்க இரவில் இந்த ஒரு பொருளை தலையைச் சுற்றி நெருப்பில் போடுங்கள்!
‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது’ என்பது திருஷ்டி பழமொழி ஆகும். யாராக இருந்தாலும் நம்மை விட மற்றவர்கள் உயர்ந்து செல்லும் பொழுது அதை கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர பொறாமையோடு அல்லது ஏக்கத்தோடு பார்ப்பது கூடாது. அப்படிப் பார்க்கும் பொழுது அதுவே அவர்களுக்கு திருஷ்டியாக மாறி தடைகளை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி தெரிந்தும், தெரியாமலும் நம்மேல் இருக்கும் திருஷ்டிகள் நீங்க இந்த 1 பொருளை பயன்படுத்தி சுற்றி போடலாம், அது என்ன பொருள்? எப்படி சுற்றி போட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
ஒருவருடைய ஏக்கப்பார்வை கூட கண் திருஷ்டியாக மாறும். அதே போல பொறாமையோடு பார்க்கும் பொழுதும் திருஷ்டியாக மாறுகிறது. உதாரணத்திற்கு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை பார்க்கும் பொழுது ஒரு ஏக்கம் ஏற்படுகிறது. நாம் வாங்க வேண்டிய பொருட்களை நம்மால் வாங்க முடியாத பொழுது அதை வைத்திருப்பவர்களை பார்க்கும் பொழுது நமக்கு ஏக்கம் ஏற்படுகிறது. இப்படி ஏக்கத்தோடு பார்க்கும் பார்வையும் திருஷ்டி தான்.
சிலர் நாம் வளர்ந்து விடக்கூடாது என்று வேண்டுமென்றே வளர்ச்சியை தடை செய்ய தூண்டி விடுவார்கள் அல்லது நம்மை பொறாமையோடு பார்த்து வயிற்று எரிச்சல் படுவார்கள். இப்படி வேண்டுமென்றே செய்தாலும் அதுவும் திருஷ்டி தான். இப்படி தெரிந்தும், தெரியாமலும், வேண்டியும், வேண்டாமலும் நாம் பார்க்கும் பார்வை மற்றவர்களுக்கு கெடுதல்களை ஏற்படுத்தாமல் இருக்க அவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் தான் இது.
நாட்டு மருந்து கடைகளில் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்கும் கடைகளிலும் கிடைக்கும் தெய்வீக பொருளாக இருக்கும் வெண்கடுகு, திருஷ்டி தோஷத்தை போக்கும் அற்புதமான ஒரு ஆயுதம் ஆகும் என்றே சொல்லலாம். எலுமிச்சைக்கு நிகரான சக்தி இந்த வெண்கடுகிற்கு உண்டு. எலுமிச்சையை சுற்றி போட்டாலும், திருஷ்டிகள் அனைத்தும் மறையும், ஆனால் இப்படி நாம் வெண்கடுகு கொண்டு சுற்றி போடும் பொழுது இன்னும் நல்ல பலன்கள் நமக்கு கிடைக்கும்.
நீங்கள் தினந்தோறும் வேலைக்கு சென்று வருபவர்களாக இருந்தாலும் அல்லது உங்கள் மேல் திருஷ்டி அதிகம் படும் படியான இடத்திற்கு சென்று விட்டு நீங்கள் வந்தாலும், நல்ல காரியத்திற்கு போய் விட்டு வந்தாலும் வீட்டிற்குள் வந்ததும் முதல் வேலையாக உங்களை கிழக்கு நோக்கி அமர்ந்து செய்து வீட்டில் இருக்கும் பெரியவர்கள் திருஷ்டி சுற்றி போட சொல்லுங்கள். ஒரு சில வீடுகளில் எல்லாம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட நம்மைப் பார்த்து பொறாமைப் பட தான் செய்வார்கள். அவர்களுடைய கண்ணே போதும், வேறு யாருடைய கண் திருஷ்டியும் தேவையே இல்லை. இது போல இருக்கும் கெட்ட திருஷ்டி கழிப்பதற்கு வெண்கடுகு சிறந்த பரிகாரமாக இருக்கும்.
கிழக்கு நோக்கி அமர செய்து நம்முடைய இடது கை உள்ளங்கையில் சிறிதளவு வெண்கடுகு வைத்துக் கொண்டு அவர்களுடைய உச்சந்தலையைச் சுற்றி வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் சுற்றி திருஷ்டி கழித்து அதனை எரியும் நெருப்பில் போட்டு விட வேண்டும். வெண் கடுகு வெடித்து சிதறுவது போல, அவர்கள் மேல் இருக்கும் திருஷ்டியும் சிதறி ஓடி விடும். இதனால் திருஷ்டி தோஷத்தால் ஏற்படும் எந்த விதமான பாதிப்புகளும் அவர்களை அண்டுவதில்லை
https://www.youtube.com/watch?v=OZrfce3V0WQ
https://www.youtube.com/watch?v=5su6b16yev4
https://www.youtube.com/watch?v=dJNSQKPdpfQ
https://www.youtube.com/watch?v=36RblRJ3M7U
https://www.youtube.com/watch?v=36RblRJ3M7U&t=211s
Comments
Post a Comment