இறுதிச் சடங்கு LAST RITES
யாராவது இறந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள். உனக்கு அதனால் எந்த வருத்தமும் இல்லை என்றால் என்னவோ உன்னிடம் தவறு இருக்கிறது என்று நினைக்க வருகிறாய்.
ஒருவர் இறந்துவிட்டார் எனும் போது எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும். அதுதான் இயல்பு என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அது இயல்பு அல்ல. அது சராசரி இயல்பான வருத்தம் அல்ல. நீண்ட காலமாகப் பழகி வைத்திருக்கும் ஒரு வழக்கம். இல்லையேல் அழுது அகற்றுவதற்கு அதில் ஒன்றும் இல்லை.
மரணம் எதையும் அழிப்பதில்லை . உடல் மண்ணால் ஆனது . மண்ணுக்குள் போய்ச் சேர்ந்துவிடுகிறது . பிரக்ஞைக்கு இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன . இன்னும் ஆசைகளின் பீடிப்பு இருந்தால் இன்னொரு கருப்பைக்குள் புகுந்து பிறவியெடுக்கிறது . எல்லா ஆசைகளும் இல்லாமல் போய்விட்டன என்றால் இறைவனின் கருப்பைக்குள் நுழைந்துவிடுகிறது .
நித்தியத்துக்குள் போய்விடுகிறது . எதுவும் அழிவதில்லை .
ஆனால் நீயோ பல நாட்கள் அழுது அரற்றிக் கொண்டிருக்கிறாய். உன் துயரத்தை சுமந்து திரிகிறாய். அது வெறும் சடங்குதான். அல்லது அப்படி சடங்கு பூர்வமானது இல்லையென்றால் செத்துப் போனவன் மீது உனக்கு பிரியம் ஏதுமில்லை. ஏதோ ஒரு விதமான குற்ற குறுகுறுப்பு உனக்கு இருக்கிறது.
.அந்தந்தக் கணத்தை முழுமையாக வாழும் எவரும் எந்த குற்ற குறுகுறுப்பையும் உணர்வதில்லை. முழுமையாக வாழ்ந்து விட்டாய் என்றால் எந்த கேள்வியும் இருக்காது.
பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?
இறுதிச் சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும்.
ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகிறது.
ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.
இறந்தவர்கள் மரணத்திற்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது.
ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது.
இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களைப் பார்க்கலாம்.
இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறி விடும்.
எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும்.
இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும்.
இதனை தடுக்கத்தான் மூக்கில் பஞ்சு, நாடிகட்டு, என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள்.
மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணம் நுண்ணுயிர்கள் உயிருடன் இருப்பவர்களின் உடலில் பரவாமல் இருக்கத் தான்*.
விளக்கேற்றுவது.
இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும்.
உயிர் சக்தியானது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறி விடும்.
அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேறத் தொடங்கி விடும்.
ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றி வரும்
இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது.
இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றி வைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும்.
விளக்கேற்றி வைத்த பின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்
ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகி விடும்.
அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும்.
விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.
ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?
அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும்,
ஏனெனில் உடலை தகனம் செய்வதுமுதன்மையானதாகும்.
ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும்,
மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும்.
இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும்.
எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது.
அறிவியல் ரீதியாக கூறும் போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும்.
இது சுற்றி இருப்பவர்களை எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.
மூங்கில் பாடை.
மூங்கில்கள் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது,
இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும்.
மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.
கால்கள் சேர்த்து கட்டப்படுவது
இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும்.
இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.
மண்பானை.
இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது.
உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது.
மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை...
ஆதலால் நாம் அனைவரும்
இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பின்பற்றுவோம்
Comments
Post a Comment