மனிதப் பிறவி
"துர்லபம் மானுஷம் ஜென்மா" :/
"மனிதப் பிறவி கிடைப்பதற்கு மிக அரிதானது".
மொத்தம் செடி, கொடி, புழு, பூச்சி, ஆடு மாடு, புலி சிங்கம் போன்ற நான்கு கால் பிராணிகள், பறவைகள், மனிதர்கள் உள்பட மொத்தம் 84 லக்ஷம் ஜீவராசிகள் பிரம்மாவின் படைப்பில் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அடுத்து நமக்கு மனிதப் பிறவி எப்போது வரும் என்பது நிச்சயம் இல்லை.
அடுத்த பிறவி நமது கர்மவினைகளுக்கேற்ப எந்தப் பிறவி வேண்டுமானாலும் வரலாம்---புழு பூச்சி உள்பட.
மனிதப் பிறவியில் மட்டும்தான், ஒருவன் நல்ல புண்ணிய காரியங்கள் செய்து, அதை பகவானுக்கு அர்ப்பணித்து, பாவ காரியங்களைத் தவிர்த்து, அடுத்து பிறப்பு---இறப்பு இல்லாத நிலையை, அதாவது மோக்ஷத்தை அடைய முடியும்.
இதைத்தான்,
1. ஒளவையார் வாக்கு :
"அரிது அரிது மானிடராயப் பிறப்பது அரிது".
2.ஶ்ரீஆதி சங்கரர் வாக்கு :
விவேக சூடாமணி---2.
"ஜந்துநாம் நர ஜென்ம துர்லபம்". அதாவது,
"ஜீவராசிகளுக்கு மனித ஜென்மா கிடைப்பது மிகவும் துர்லபம்/அரிது".
3.அவதூதர் தத்தாத்ரேயர் வாக்கு :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
(11--9--29).
"லப்த்வா ஸுதுர்லபம் இதம் பஹுஸம்பவாந்தே மானுஷ்யம் அர்த்தமம் அநித்யம்".
அதாவது, "கிடைத்தற்கரிய இந்த மனித உடல், பல பிறவிகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது".
4.விதேக மன்னர் நிமி வாக்கு :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
(11--2--29).
"துர்லபோ மானுஷோ தேஹோ". அதாவது,
"ஜீவர்களுக்கு மனிதச் சரீரம் கிடைப்பது என்பது மிகவும் துர்லபம்/அரிது".
5.பிரஹ்லாதன் வாக்கு :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
(7--6--1).
"துர்லபம் மானுஷம் ஜென்மா". அதாவது,
"மனிதப் பிறவி கிடைப்பது மிகவும் துர்லபம்/அரிது".
6.ஒரு பணக்காரனும் மஹாகஞ்சனுமான ஒரு பிராமணரின் அனுபவத்தில் வந்த வாக்கு :
இதை மேற்கோள் காட்டி, பகவான் ஶ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு தன் வாக்கால் கூறுகிறார் :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
(11---23---23.)
மனித சரீரம் என்பது மோக்ஷ---
ஸ்வர்க்கங்களின் நுழைவாயில் போன்றது.
இத்தகைய பெறற்கரிய மனித உடலைப் பெற்றுள்ள அறிவாளியான ஒருவன், அனர்த்தங்களுக்கு இருப்பிடமான செல்வச் சக்கரத்தில் சிக்கிக் கொள்வானா ?
7.இக்ஷ்வாகு வம்ஸத்தில் உதித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி வாக்கு :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
(10--51--47.)
இந்த "பாரத வர்ஷம்/தேசம்", புண்ணியச் செயல்கள் அனைத்தும் நடைபெறும் "கர்ம பூமி".
இங்கு மனிதப்பிறவி பெறுவது மிகமிக உயர்வே.
அது அவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினாலும், பகவான் அருளினாலும் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
அதிலும் ஊனம் இல்லாமல் பிறவி கிடைப்பது மேலும் உயர்ந்ததே.
8.பகவான் ஶ்ரீகிருஷ்ணரிடம் வசுதேவர் வாக்கு :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
(10---85---16.)
"ஈசனே ! தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனப்படும் நான்குவிதப் பெறும்பேறுகளை, அதாவது புருஷார்தங்களைத் தேடிப் பெறும் திறமையுள்ள கிடைத்தற்கரிய மனிதப்பிறவியைத் தற்செயலாக அடைந்தும்,
தங்கள் மாயையால் நான் பெற வேண்டிய மோக்ஷத்தைப் பெறுவதில் கவனக்குறைவால் என் வயது வீணானது".
9.உத்தவரிடம் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் வாக்கு :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
(11---11---10.)
"இந்த உடல் தெய்வாதீனமானது.
பிராரப்த வினைக்கு ஏற்ப கிடைக்கப் பெற்றது.
புலன்கள், குணங்களின் தூண்டுதலால் செயல்களைப் புரிகின்றன.
ஆனால், அறிவு மயங்கியவன்----
"நானே எல்லாச் செயல்களையும் செய்கிறேன்"
என்று அஹங்காரம் கொள்கிறான்.
அதனால் ஸம்ஸாரத்தில் கட்டுப்படுகிறான்".
10.ஸநகாதிகள் நால்வருக்கு "ஹம்ஸாவதாரம்" எடுத்த பகவான் மஹாவிஷ்ணு உபதேஸம் :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம் :
(11---13---34.)
"இந்த மனிதச் சரீரம்----- ஸத்துவம், ரஜஸ், தமஸ் எனப்படும் மூன்று வகையான குணங்களின் காரியம்.
கனவுபோல் மாயையின் லீலை.
அஞ்ஞானத்தால் கல்பிக்கப்பட்டது".
11.ஸநகாதிகள் நால்வருக்கு "ஹம்ஸாவதாரம்" எடுத்த பகவான் மஹாவிஷ்ணு உபதேஸம் :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.
(11---13---37.)
"இந்த தேகம், கர்மாதீனமாக ஏற்பட்டது.
தன்னை உண்டு பண்ணிய கர்மவேகம் எதுவரையில் இருக்குமோ, அந்தக் காலம் வரை பிராணனனுடன் இருந்து கொண்டிருக்கும்.
அது கனவு போன்றது".
12.ஸாம வேதம் :
கேனோபநிஷத் வாக்கு :
(2---5.)
"சரீரம் நித்யம் என்று எண்ணி, பகவானை வழிபட காலதாமதம் செய்யக்கூடாது.
கவனக்குறைவினால் இந்த மனித ஆயுள் வீணாகிவிட்டால், பிறகு வருத்தப்பட்டுப் பயன் இல்லை.
இந்த மனிதப் பிறவியில் பகவானை அறிந்து கொண்டு விட்டால் நன்று.
அறியாவிட்டால் மிகப் பெரிய இழப்பு."
Comments
Post a Comment