சனி

மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோ பலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம்
இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.
இன்ப துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேக மும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர்.

ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.
நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப-துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான்.

சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றி னால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை.
வழிபட விரும்புவோர், சனிக் கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று எள் முடிச்சு தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுங்கள்.
வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல் பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனிபகவானை மனதாரப் பிரார்த்தித்து வாருங்கள்.
Comments
Post a Comment