சமையல் அறை லட்சுமி
மஹா லட்சுமி துணை
சமையல் அறை லட்சுமி
சமையல் அறையில் மிக முக்கியமான ஒன்று அடுப்பு ஆகும்,,,
,அடுப்பு என்பது பரணி நட்சத்திர குறியீடு,,
பரணி நட்சத்திர அதிபதி சுக்ரன்(லட்சுமி) ஆவார் ,,,,
,இந்த பரணி நட்சத்திரம் மேஷம் எனும் நெருப்பு ராசியில் இடம்பெறும்,,,,
சமையல் அறையில் லட்சுமி வாசம் செய்கிறாள்,,,,
சமயற்கட்டு சுத்தமாக வைத்தால் அங்கு லட்சுமி வாசம் செய்வாள்,,
இது மூத்தவர்கள் முன்னோர்கள் கூற்று,,(வாக்கு)ஆகும்,
சமையல் அறை சுத்தமாக இருந்தால் பண கஷ்டம் வராது ஜீவன பஞ்சம் வராது,,,,இதுவே 100%உண்மை ,,,,
வெள்ளி கிழமை என்றால் அடுப்பை சுத்தம் செய்து,,,பசும் சாணம் மொழுகி கோலமிட்டு அழகுபடுத்தி வணங்கி பின்னர் தான் சமைக்க தொடங்குவர்,,
அப்படிப்பட்ட பாட்டிமார்கள் முன்னோர்கள் இப்போதும் இருக்கிறார்கள்,,
முன்னோர்கள் படுக்கை அறையில் இருந்து எழுந்து நேரடியாக கிச்சன் செல்ல மாட்டார்கள்,,,,
முதலில் குளித்து பின்னர் தான் சமையல் பாத்திரம்,, அஞ்சறை பெட்டி தொடுவார்கள்,,
அஞ்சறைப்பெட்டியில் லட்சுமி வாசம் செய்வாள்,,,,
மற்றும் ஊறுகாய் ஜாடியில் குபேரன் லட்சுமி இருப்பார்கள்,,
உப்பில் லட்சுமி இருப்பாள்,, என்றும் சொல்லி சென்று இருக்கிறார்கள்,
அரிசியில், ஹரியும் சிவனும்,,, இருவரும் இருக்கிறார்கள்,, துவரை,, செவ்வாய் தானியம்,,
இப்படி ஒவ்வொரு சமையல் அறை பொருளிலும் ஒவ்வொரு கடவுள்,, ஒவ்வொரு கிரகம் இருக்கிறது என்றும் சொல்லலாம்,,
கிட்ட தட்ட சமையல் அறைதான் சாமி என்று நினைத்தவர்கள்,நம் முன்னோர்கள்,,,
அதே போல இரவில் பெண் தூங்கும் முன்னர் எச்சில் பாத்திரங்களை அப்படியே விட்டு விட்டு காலையில் கிளீன் செய்வோம் என்று தூங்க செல்ல கூடாது,, எச்சில் பாத்திரங்கள் வெகுநேரம் இருக்க கூடாது,,((சனி வாசம் செய்து விடுவார்,,))
சாமி போட்டோவை கிச்சனில் வைத்து விட்டால் நமக்கு ஒரு மன உறுத்தல் வரும்,,,,குளித்து விட்டு சமையல் அறை செல்வோம் என்று நினைப்பாள் பெண்,,,,
,,,,சமையல் அறையில் ஓரு சின்னதாக கன்னி மூலை ஒதுக்கி கிழக்கு பார்த்தவாறு சாமி படங்களை வைக்க வேண்டும்,,, ,, அதாவது குளிக்காமல் சுத்தம் இல்லாமல் உள்ளே நுழைய கூடாது என்பதற்காக இதை நாம் அமல்படுத்தலாம்,,முயன்று பார்க்கலாம்
பெண்கள் எப்போதும் குளித்த பின்னர் கிச்சன் செல்வதற்கும்,,
பெண்கள் குளிக்காமல் கிச்சன் செல்வதற்கும்,,,
செல்வ நிலை ஏற்ற தாழ்வு கண்கூடாக காண முடியும்,,,,,
பண வரவு தடை தாமத அறிகுறிகள்,,தென்பட வாய்ப்பு உண்டு,,
சினிமா காட்சிகளில் கூட பெண் விரைவில் எழுந்து குளித்து பின்னர் காபி கப்புடன் கணவனை எழுப்ப வருகிறாள் தானே,,,,
சினிமா வேறு real life வேறு என்று ஒரு சில விஷயங்களில் கடந்து செல்ல முடிவதில்லை ,,,
நமது வாழ்வியலின் சில விஷயங்கள் தான் நாடகமாக சினிமாவாக பிரதிபலிக்கிறது ,,,
((முன்பு ஒருமுறை பதிவில் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே,,, பெண் தான் ஆதி சக்தி,,, பெண் சரியாக முறையாக பின்பற்றினாள் தான் ஆணுக்கு வேலை சுலபம்,, கணம் குறையும், வருமானம் கூடும்,,,,,என்றும்,, அதே போல பெண்களை அழ வைக்கவும் கூடாது என்றும் பதிவு இட்டுருக்கிறேன்,,)))
பொருளாதார பிரச்சனை என்றால் கிச்சனை கவனித்து செயல்படனும்,,
ஒருவர் மாற்றி ஒருவர் நோய்க்கு வைத்தியம் எடுக்கிறார்கள் எனில் வட மேற்கு மூலை எனும் கழிவறையை கவனித்து செயல்பட வேண்டும்,
,சாக்கடை அடைப்பு மட்டும் வீட்டுக்கு இருக்கவே கூடாது,, தினமும் கவனிக்கவேண்டும்,,
கவனித்தால் எல்லாம் சரி ஆகும்,
,வீட்டை கவனி,, வீடு சரியாக இருந்தால்,, அவ்வீட்டுக்கென்று இறைவனால் ஒதுக்கப்பட்ட பொருளாதாரம் வந்து சேரும்,,,,,
சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி
சுத்தமாக இருந்தால் தான் லட்சுமி வாசம் செய்வாள்,,
சுக்ரன் கிரக காரகம் யாதெனில் பளபள வென இருக்கும் மாளிகை,, சுத்தமாக இருக்கும் அறைகள், வீடுகள்,, சுக்ரன் five star hotel காரகம்,, மிக பெரிய ஹோட்டல் களில் சுத்தமாக இருக்கும், அதனால் தான் கோடி கோடியாக லாபம் ஈட்டுகிறார்கள்,,
நம் சமையல் அறையை சுத்தமாக வைத்துக்கொள்ள நம் வீட்டுக்கு லட்சுமி உறுதியாக குடி இருப்பாள்,,,,
குறிப்பு::
சமையல் அறை சுத்தம் இல்லாமல் எத்தனை லட்சுமி ஸ்லோகங்கள் பாராயணம் செய்தாலும் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்,,,
மஹாலக்ஷ்மி துணை
Comments
Post a Comment