SRI KRISHNA JAYANTHI 30-08-2021பிலவ வருடம் ஆவணி 14 திங்கள் கிழமை.
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.
கடமையைச் செய், பலனை எதிர் பாராதே!
நீ எதையும் அடையவும் இல்லை, இழக்கவும் இல்லை,எல்லாம் என்னால் கொடுக்கப்பட்டது, என்னால் எடுக்கப்பட்டது
என்றெல்லாம் மக்களுக்கு உபதேசித்த கண்ணன் பிறந்த தினம் கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் கொண்டாடப் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி / ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பிலவ வருடம் ஆவணி 14 திங்கள் கிழமை. கிருஷ்ண ஜெயந்திகொன்டாட படுகிறது.
அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம்.
தாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களை, மிக நல்ல சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள், அஷ்டமி, நவமி என்பது புனிதமான திதிகள். அவை இறைவனுக்கு உரியவை. தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவை.
கிருஷ்ணபரமாத்மாவின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்புமிக்கது. தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா“ என்கிறோம். அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.
கிருஷ்ணர் அவதார வரலாறு:
ஸ்ரீ கிருஷ்ணரின் கதை கம்டன் என்ற கொடுங்கோல் மன்னன் மதுராவை ஆண்டு வந்தான். கம்சனின் தங்கையான தேவகி வாசுதேவனை மணந்தாள். அவளின் திருமண நாளின் போது, வானுலகில் இருந்து வந்த ஒரு தெய்வீக குரல், தேவகியின் எட்டாவது மகன் கம்சனை அழிப்பான் என கூறியது. கம்சனிடம் வாக்கு இதை கேட்டு பயந்து போன கம்சன், தன் தங்கையைக் கொல்ல தன் வாளை உடனடியாக எடுத்தான். குறுக்கிட்ட வாசுதேவன், தன் மனைவியை விட்டு விடுமாறு வணங்கினான். தங்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் ஒப்படித்து விடுவதாக வாக்கும் அளித்தான். தேவகியின் எட்டாவது மகனின் கையால் தன் மரணம் நிகழும் என்று கணித்த தீர்க்கதரிசனத்தை எண்ணி பயந்த கம்சன், தேவகியையும் அவளது கணவனான வாசுதேவனையும் சிறையில் அடைத்தான். எட்டாவது மகன் தேவகிக்கும் வாசுதேவனுக்கும் பிறந்த எட்டாவது மகன் தான் ஸ்ரீ கிருஷ்ணர். அவர்களின் முதல் ஆறு குழந்தைகளை கம்சன் கொன்ற பிறகு, ஏழாவதாக கருவுற்ற குழந்தை கருச்சிதைவில் இறந்தது. அதற்கு பின் பிறந்தவர் தான் கிருஷ்ணர். குழந்தை மாற்றம் எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அக்குழந்தையின் தலைவிதியை எண்ணி தேவகியும் வாசுதேவனும் வருந்தினர். அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றிய விஷ்ணு பகவான், அவர்களையும் மதுராவின் மக்களையும் காப்பாற்ற தானே அவதாரம் எடுத்து வரப்போவதாக கூறினார். கிருஷ்ணர் பிறந்தவுடன் அவரை எடுத்துக் கொண்டு, கோகுலத்தில் உள்ள தன் நண்பனான மாடு மேய்ப்பவர்களின் தலைவனான நந்தாவிடம் ஒப்படைக்குமாறு வாசுதேவனிடம் கூறினார். அதே நேரத்தில் தான் நந்தாவின் மனைவியான யசோதா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு தன் மகனை மாற்றி விட்டு, யசோதாவின் பெண் குழந்தையை சிறைக்கு வாசுதேவன் எடுத்து கொண்டு வர வேண்டும். அவன் பாதையில் எதுவும் தடையாக இருக்காது என விஷ்ணு பகவான் மீண்டும் ஒரு முறை உறுதியளித்தார். ஒரு அஷ்டமி நாளன்று நடு இரவில், கம்சனின் சிறையில் பிறந்தது அந்த தெய்வீக குழந்தை. யமுனா நதி வழி தெய்வீக அறிவுறுத்தல்களை நினைவில் வைத்திருந்த வாசுதேவன், தன் குழந்தையை தன் மடியில் வைத்துக் கொண்டு கோகுலத்தை நோக்கி நடந்தான். தன் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை வாசுதேவன் கண்டான். தன் கால்களை அசைத்தவுடன் அந்த சங்கிலி அவிழ்ந்தது. சிறைச்சாலை கதவுகளும் திறந்தன. கிருஷ்ணரை தன்னுடன் எடுத்துக் கொண்டு யமுனா நதியை கடந்து கோகுலத்தை அடைந்தான். அங்கே அரக்கனான தன் மாமா கம்சனின் அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பாக அவர் வளரலாம்.
ஐந்து தலை நாகத்தின் நிழல் யமுனை நதியை கடக்கையில், வாசுதேவன் தன் குழந்தையை தன் தலைக்கு மேல் வைத்துக் கொண்டான். மழை பெய்து ஆற்றில் வெள்ளம் போய் கொண்டிருந்தது. ஆனால் வாசுதேவனுக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது தண்ணீர். அதிசயமாக ஐந்து தலை நாகம் அவனை பின் தொடர்ந்து, குழந்தைக்கு நிழல் போல் வந்து கொண்டிருந்தது. சிறைச்சாலைக்கு திரும்பிய வாசுதேவன் வாசுதேவன் கோகுலத்தை அடைந்ததும், நந்தாவின் வீட்டு கதவுகள் திறந்திருப்பதை வாசுதேவன் கண்டான். அங்கே அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவன் மெதுவாக குழந்தைகளை மாற்றினான். பின் அந்த பெண் குழந்தையுடன் மீண்டும் கம்சனின் சிறைச்சாலையை நோக்கி ஓடினான். சிறைச்சாலைக்குள் நுழைந்தவுடன் அதன் கதவுகள் தானாக மூடிக்கொண்டன. அப்போது விழித்துக் கொண்ட காவலாளிகள், பெண் குழந்தை பிறந்துள்ளது என உணர்ந்து கொண்டார்கள். யோகமாயா இந்த பிறப்பைக் பற்றி கம்சன் அறிந்த போது, சிறைச்சாலைக்குள் விரைந்தான். அந்த குழந்தையை ஒரு கல்லின் மீது தூக்கி எறிந்தான். ஆனால் இம்முறை அவன் கையில் இருந்து நழுவிய அக்குழந்தை வானை சென்றடைந்தது. காற்றில் எழுந்த அவள், விஷ்ணு பகவானின் உதவியாளரான யோகமாயாவாக உருமாறினாள். கம்சனை பார்த்து "ஏ முட்டாளே! என்னை கொல்வதால் உனக்கு என்ன கிடைக்கும்? உன் எதிரி ஏற்கனவே எங்கோ பிறந்து விட்டான்" என யோகமாயா கூறினாள். புட்டனா வதம் தான் அழிவதற்கு முன்பு தன்னுடைய குழந்தை எதிரியை எப்படியாவது அழிக்க வேண்டும் என கம்சன் நினைத்தான். அதற்காக புட்டனா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். தேவகி கிருஷ்ணரை பெற்றெடுத்த அதே நாளில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் அவன் கொல்ல சொன்னான். அதனால் அழகிய பெண்ணாக வேடமணிந்த அந்த அரக்கன் தன் மார்பகங்களில் விஷத்தை தடவிக் கொண்டான். அந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் பாலூட்ட பறந்து வந்து நோட்டமிட்டான். நந்தாவின் வீட்டிற்கு வந்த அந்த அரக்கன், தன் குழந்தையை தன்னிடம் காட்டுமாறு யசோதையிடம் கேட்டான். குழந்தை கிருஷ்ணரை தன் மடியில் போட்ட புட்டனா தன் மார்பக காம்புகளை குழந்தையின் வாயில் திணித்தான். கண்களை மூடிக்கொண்ட கிருஷ்ணர், விஷத்தை உறிஞ்சாமல், அவனின் மூச்சு காற்றை உறிஞ்சி, அவனை கொன்றார். ஷகாட்சுரா வதம் புட்டனாவின் மரணத்தை கேள்விப்பட்ட கம்சன் அதிர்ந்தான். அதனால் ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். ஒரு வண்டி போல் வேடமணிந்து கொண்ட அவன் கோகுலத்தை அடைந்தான். கிருஷ்ணருக்கு மூன்று மாதங்கள் ஆகியிருந்த போது, அந்த நிகழ்வை கொண்டாட, யசோதா ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாள். வண்டியாக மாறிய ஷகாட்சுரா மாடுகளை மேய்க்கும் அனைத்து பெண்களும் அவள் வீட்டு முன்பு கூடி, பண்டிகை பாடல்களை பாடினார்கள். விருந்தாளிகளை வரவேற்பதில் யசோதா சுறுசுறுப்பாக இருந்தாள். கிருஷ்ணாவின் பாதுகாப்பான மற்றும் நீண்ட ஆயுளுக்கு அவள் பல புனித சடங்குகளையும் மேற்கொண்டார். இதில் மும்முரமாக இருந்த அவள், மர வண்டியின் அடியில் படுத்திருந்த குழந்தை கிருஷ்ணரைப் பற்றி மறந்தாள். ஷகாட்சுரா கிருஷ்ணரின் மேல் வண்டியாக இருந்தான். கிருஷ்ணரின் மேல் வண்டியை ஏற்றி நசுக்கிக் கொல்ல நினைத்தான். வண்டியின் சக்கரத்தை உதைத்து உடைத்தது பசியெடுத்த கிருஷ்ணர் அழத் தொடங்கினார். இதனை கண்டு கொள்ளாமல் யசோதா இருந்ததால், கிருஷ்ணர் அந்த வண்டியின் சக்கரத்தை உதைத்தார். மிகப்பெரிய சத்தத்துடன் அந்த வண்டி உடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அனைவரும் வண்டியின் அடியில் கிருஷ்ணர் பாதுகாப்பாக படுத்திருந்ததை பார்த்தனர். குழந்தை கிருஷ்ணர் அழுது கொண்டிருந்தார். குழந்தையை உடனடியாக தூக்கிய யசோதா, அவனை கட்டிபிடித்து, பாலூட்ட தொடங்கினார். அண்டத்தைப் பற்றிய பார்வை கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமன், கிருஷ்ணர் மண்ணை உண்ணுகிறார் என தன் தாய் யசோதாவிடம் புகார் கூறினான். மிகுந்த ஆர்வமடைந்த யசோதா, கிருஷ்ணரின் வாயை திறக்க சொன்னாள். தான் பார்த்த காட்சியை கண்டு யாசோதா வியந்தே போனாள். கிருஷ்ணரின் வாயில் அவள் மொத்த அண்டத்தையே கண்டாள். சூரியன், சந்திரன், அனைத்து நட்சத்திரங்கள், வானம், மலைகள், ஆறுகள், தீவுகள், பெருங்கடல்கள், அனைத்து உயிர் வாழும் ஜீவராசிகள் மற்றும் உயிர் வாழாத பொருட்களைக் கண்டாள். வெண்ணெய் கிருஷ்ணா கிருஷ்ணர் வளரும் போது அவருடன் சேர்ந்து அவருடைய குறும்பும் வளர்ந்து கொண்டே வந்தது. பால் மற்றும் வெண்ணெய்யின் மீது அவருக்கு இருந்த காதல் பற்றிப் பல கதைகள் உள்ளது. பால் கார பெண்கள் வயலை கடக்கையில், கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் கற்களை அவர்களின் பானையின் மீது எரிந்து பானையை உடைத்து விடுவார்கள். உத்திரத்தில் வெண்ணெய் ஜாடி இவரின் குடும்பத்தில் எப்போதும் அதிகமான அளவில் பாலும், வெண்ணெய்யும் இருந்து வந்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து பல வழிகளில் கிருஷ்ணரும், பலராமனும் பாலையும் வெண்ணெயையும் திருடி வந்தனர். கிருஷ்ணருக்கு பால் பொருகளின் மீதிருந்த காதலால், வெண்ணெய் ஜாடிகளை ஒன்றாக கட்டி, உத்திரத்தில் தொங்க விட்டிருந்தாள் யசோதா. அதனால் அவை கிருஷ்ணரின் கைகளுக்கு எட்டாமல் இருந்தது. நண்பர்களுடன் வெண்ணெய் திருட்டு ஒரு நாள், வேகமாக கிருஷ்ணர் தூங்கியதால், அருகில் இருந்த கிணற்றில் ஒரு வாளி தண்ணீர் இரைக்க சென்றால் அவள். படுக்கையில் இருந்து எழுந்த கிருஷ்ணர் விசில் அடித்தார். சிறுவர்கள் சிலரும், குரங்குகளும் அவரின் வீட்டை நோக்கி வந்தனர். அங்கே வந்த அவர்கள் உடனடியாக ஒன்று கூடி, கிருஷ்ணரை தங்களின் தோள் மீது ஏற வைத்து, வெண்ணெய் ஜாடிகளை இறக்கினர். பின் அனைவரும் வெண்ணெய்யை உண்ண ஆரம்பித்தார்கள். இதில் மிகவும் மூழ்கி போன அவர்கள் வீட்டிற்குள் யசோதா நுழைவதை கவனிக்க தவறினர். வீட்டிற்குள் வந்த யசோதா, இதனை கண்டு கலங்கினாள். பின் கிருஷ்ணரை கண்டித்தாள். கயிற்றல் கட்ட முயன்ற யசோதா மிகவும் கோபமடைந்த அவள் கிருஷ்ணரை ஒரு குச்சியை கொண்டு துரத்தினார். குரங்குகளும் நண்பர்களும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் கிருஷ்ணரோ தன் தாயிடம் இருந்து நன்றாக அடி வாங்கினார். கிருஷ்ணரை ஒரு கயிற்றில் கட்ட முயன்றாள். ஆனால் ஒவ்வொரு முடிச்சை போடும் போதும், அந்த கயிறு மிகவும் குட்டையாவதை அவள் கவனித்தாள். அவளைப் பார்த்து சிரித்த கிருஷ்ணர் தானே முடிச்சுகளை போட்டார். அதனால் அவரை அரவை கருவியில் சேர்த்து கட்டி வைத்தார். தேவர்களாக உருமாறிய மரங்கள் தவழ முயற்சித்த கிருஷ்ணர், முற்றத்தில் இருந்த இரண்டு அர்ஜுன மரங்களுக்கு இடையே மாட்டி கொண்டார். கீழே விழுந்த அந்த மரங்கள் தேவர்களாக உருமாறி, கிருஷ்ணரை வணங்கினார்கள். நாரதரின் சாபத்தால் 100 வருடங்கள் இப்படி மரமாக நின்றிருந்த அவர்களை கிருஷ்ணர் விடுவித்தார். கிருஷ்ணரின் வேறு சில வதங்கள் கம்சனின் வேட்டையும் நிற்கவில்லை. அவன் இன்னமும் சில அரக்கர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்தான். அவர்கள் ஒவ்வொருவரையும் கிருஷ்ணர் கொன்றார். அதில் சில, 1. பகாசுர வதம் 2. அகாசுர வதம் 3. கலிய வதம் 4. அரிஸ்டாசுர வதம் கடைசியாக நடந்தது தான் கம்சனின் மரணம். இதனை கம்ச வதம் என அழைப்பர்.
பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.
தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன்.
அண்டத்தைப் பற்றிய பார்வை
கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமன், கிருஷ்ணர் மண்ணை உண்ணுகிறார் என தன் தாய் யசோதாவிடம் புகார் கூறினான். மிகுந்த ஆர்வமடைந்த யசோதா, கிருஷ்ணரின் வாயை திறக்க சொன்னாள்.
தான் பார்த்த காட்சியை கண்டு யாசோதா வியந்தே போனாள். கிருஷ்ணரின் வாயில் அவள் மொத்த அண்டத்தையே கண்டாள். சூரியன், சந்திரன், அனைத்து நட்சத்திரங்கள், வானம், மலைகள், ஆறுகள், தீவுகள், பெருங்கடல்கள், அனைத்து உயிர் வாழும் ஜீவராசிகள் மற்றும் உயிர் வாழாத பொருட்களைக் கண்டாள்.
வெண்ணெய் கிருஷ்ணா
கிருஷ்ணர் வளரும் போது அவருடன் சேர்ந்து அவருடைய குறும்பும் வளர்ந்து கொண்டே வந்தது. பால் மற்றும் வெண்ணெய்யின் மீது அவருக்கு இருந்த காதல் பற்றிப் பல கதைகள் உள்ளது. பால் கார பெண்கள் வயலை கடக்கையில், கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் கற்களை அவர்களின் பானையின் மீது எரிந்து பானையை உடைத்து விடுவார்கள்.
உத்திரத்தில் வெண்ணெய் ஜாடி
இவரின் குடும்பத்தில் எப்போதும் அதிகமான அளவில் பாலும், வெண்ணெய்யும் இருந்து வந்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து பல வழிகளில் கிருஷ்ணரும், பலராமனும் பாலையும் வெண்ணெயையும் திருடி வந்தனர். கிருஷ்ணருக்கு பால் பொருகளின் மீதிருந்த காதலால், வெண்ணெய் ஜாடிகளை ஒன்றாக கட்டி, உத்திரத்தில் தொங்க விட்டிருந்தாள் யசோதா. அதனால் அவை கிருஷ்ணரின் கைகளுக்கு எட்டாமல் இருந்தது.
நண்பர்களுடன் வெண்ணெய் திருட்டு
ஒரு நாள், வேகமாக கிருஷ்ணர் தூங்கியதால், அருகில் இருந்த கிணற்றில் ஒரு வாளி தண்ணீர் இரைக்க சென்றால் அவள். படுக்கையில் இருந்து எழுந்த கிருஷ்ணர் விசில் அடித்தார். சிறுவர்கள் சிலரும், குரங்குகளும் அவரின் வீட்டை நோக்கி வந்தனர். அங்கே வந்த அவர்கள் உடனடியாக ஒன்று கூடி, கிருஷ்ணரை தங்களின் தோள் மீது ஏற வைத்து, வெண்ணெய் ஜாடிகளை இறக்கினர். பின் அனைவரும் வெண்ணெய்யை உண்ண ஆரம்பித்தார்கள். இதில் மிகவும் மூழ்கி போன அவர்கள் வீட்டிற்குள் யசோதா நுழைவதை கவனிக்க தவறினர். வீட்டிற்குள் வந்த யசோதா, இதனை கண்டு கலங்கினாள். பின் கிருஷ்ணரை கண்டித்தாள்.
கயிற்றல் கட்ட முயன்ற யசோதா
மிகவும் கோபமடைந்த அவள் கிருஷ்ணரை ஒரு குச்சியை கொண்டு துரத்தினார். குரங்குகளும் நண்பர்களும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் கிருஷ்ணரோ தன் தாயிடம் இருந்து நன்றாக அடி வாங்கினார். கிருஷ்ணரை ஒரு கயிற்றில் கட்ட முயன்றாள். ஆனால் ஒவ்வொரு முடிச்சை போடும் போதும், அந்த கயிறு மிகவும் குட்டையாவதை அவள் கவனித்தாள். அவளைப் பார்த்து சிரித்த கிருஷ்ணர் தானே முடிச்சுகளை போட்டார். அதனால் அவரை அரவை கருவியில் சேர்த்து கட்டி வைத்தார்.
தேவர்களாக உருமாறிய மரங்கள்
தவழ முயற்சித்த கிருஷ்ணர், முற்றத்தில் இருந்த இரண்டு அர்ஜுன மரங்களுக்கு இடையே மாட்டி கொண்டார். கீழே விழுந்த அந்த மரங்கள் தேவர்களாக உருமாறி, கிருஷ்ணரை வணங்கினார்கள். நாரதரின் சாபத்தால் 100 வருடங்கள் இப்படி மரமாக நின்றிருந்த அவர்களை கிருஷ்ணர் விடுவித்தார்.
கிருஷ்ணரின் வேறு சில வதங்கள்
கம்சனின் வேட்டையும் நிற்கவில்லை. அவன் இன்னமும் சில அரக்கர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்தான். அவர்கள் ஒவ்வொருவரையும் கிருஷ்ணர் கொன்றார். அதில் சில,
1. பகாசுர வதம்
2. அகாசுர வதம்
3. கலிய வதம்
4. அரிஸ்டாசுர வதம்
கடைசியாக நடந்தது தான் கம்சனின் மரணம். இதனை கம்ச வதம் என அழைப்பர்.
மதுரா நகரில் கம்ச வதம் முடித்து கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டான். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.
கிருஷ்ணர் பாதம்
பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.
தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.
கண்ணா, முகுந்தா...
கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.
துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார்.
என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன். பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள். தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேலை, “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்” என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன் கௌரவர்களை ஜெயித்து இருப்பார்.
இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, அண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று கண்ணனை அழைத்தாள். அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது.
அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம். கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.
கிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, எவரும் மனதால் நினைத்தாலேபோதும், மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார்.
பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை
இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம் ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும், அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் சொன்னார்.
தன் வளர்ப்பு மகன் சொன்னதுபோல் அரசரும் கோவில் கட்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார். அசரீரி சொன்னதுபோல சமுத்திரத்தில் இருந்து இறைவனின் உருவம் செய்ய கட்டைகள் மிதந்து வந்தன. மிதந்து வந்த கட்டைகளை கொண்டு பகவானை சிலையாக வடிக்கும்படி சிற்பிகளிடம் சொன்னார். ஆனால் எவராலும் அதில் பகவானின் திருஉருவத்தை உருவாக்க முடியவில்லை.
வருத்தத்தில் இருந்தார் அரசர். அப்போது ஒரு கிழவன், “நான் இந்த கட்டைகளிலிருந்து மூன்று சிலைகள் செய்கிறேன். என்னென்ன சிலைகள் செய்ய வேண்டும்?” என்று கேட்க, ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சுபத்திரை சிலைகளை வடித்து தரும்படி அரசரும் விருப்பத்தை சொல்ல, அதற்கு அந்த கிழவன், “சரி. அப்படியே செய்கிறேன். ஆனால் அதற்கு 22 நாட்கள் ஆகும். அதுவரை யாரும் ஆலய கதவை திறக்கக்கூடாது” என்றார்.
அரசரும் சம்மதித்தார். நாட்கள் பறந்தது. 22 நாட்கள் ஆவதற்குள், “ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியவில்லை” என்பதுபோல், ஒருநாள் அவசர அவசரமாக ஆலய கதவை திறந்தார் அரசர். சிலை வடித்துக்கொண்டிருந்த கிழவர் அப்படியே மறைந்து விட்டார். கிழவன் வடிவில் வந்தது கிருஷ்ணபரமாத்மா என்பதை உணர்ந்தார் அரசர். இறைவனின் சிலை முழுமையாக இல்லாமல் இருந்ததை கண்டு, தன் அவசரத்தால் இப்படி நடந்தவிட்டதே என்று மனம் வருந்தினார். அப்போது அசரீரி குரல் ஒலித்தது.
“மனம் வருந்த வேண்டாம் இப்படியே அங்கஹீனனாக என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்றது அசரீரி. கிருஷ்ணபகவானால் உருவாக்கபட்டதுதான் பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் இருக்கும் தெய்வசிலை.
முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.
கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி வந்தார்கள்.
ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. இதை கேட்ட அந்த வீட்டின் கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடி கதவை திறந்தாள். ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை கண்டாள்
அந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?“ என்று கேட்டாள். “நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி, எனக்கு பசியாக இருக்கிறது. உணவு தருவாயா?” என்று கேட்டான் அந்த சிறுவன்.
அவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள். “அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது.” என்று சொல்லி தந்தாள். அதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன்.
“பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்.” என்றான் சிறுவன். அந்த சிறுவன் பேசியதை கேட்டு சிரித்துவிட்டால் பாட்டி. “ஏன் சிரித்தாய்?” என கேட்டான் சிறுவன். “அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. நீ அப்படி என்ன எனக்கு உதவி செய்துவிடுவாய்.?” என்றாள் பாட்டி.
“ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார்கள். நீயாவது பெரிய வேலையை தா” என்றான் சிறுவன். “நீ என் பேரனை போல இருக்கிறாள். அதனால் சொல்கிறேன். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்.” என்றாள் பாட்டி.
“எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள் தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான். மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது – “படார்” என்று குண்டு வெடிப்பது போல பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது. என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும், அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள்.
நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான். “யார் இந்த அசுரனை கொன்றது?” என்று ஒருவரையோருவர் கேள்விகேட்டுக் கொண்டிருந்தார்கள். பாட்டி திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை தெரிந்துக்கொண்டாள். “இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின் லீலைதான் இது.” என்றாள்.
முரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி” என்று பெயர் ஏற்பட்டது. “ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார். அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான்.
இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர். இறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான். பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள தெய்வம்.
கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை குசேலர்
கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை.ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம், மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார்.
“எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை. மனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள்.
“பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.” என்றால் மனைவி கொடுத்த அவுள்முட்டையுடன் புறப்பட்டார் குசேலர். கிருஷ்ணபரமாத்மாவை பார்க்க. குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார்.
“அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர்.
“அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர்.
குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா
நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.
கிருஷ்ணஜெயந்தி பூஜைமுறை
வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும்.கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்.
அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் (பத்தி, கற்பூர ஆரத்தி) காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.
பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா வாழ் மக்கள், அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைத்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள்.
கிருஷ்ண ஜெயந்தியன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை, எனவே கிருஷ்ண ஜெயந்தியன்று, வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, குழந்தை கண்ணனை வர வேற்கும் விதத்தில், வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலம் இடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.
கண்ணனின் லீலைகளை தேவர்களும் செய்ய முடியாது. கிருஷ்ணன் தேவர்களுக்கும் தேவன். ஒரு கோபி தயிர், பால், வெண்ணெய் விற்கப் புறப் பட்டாள். கண்ணன் மீதுள்ள அன்பில் தன் உணர்ச்சி யையும் இழந்துவிட்டாள். அதனால், வாங்கலையோ தயிரு என்று சொல்ல மறந்துவிட்டாள். அவள் புத்தியில் மாதவன் குடிகொண்டிருந்ததால், வேண்டுமா? கோவிந்தன் வேண்டுமா? என்று முழங்கிவிட்டாள். சூதுவாது தெரியாத கோபி பதினான்கு உலகிற்கும் நாதனாகிய கண்ணனைப் பானையில் எடுத்து வந்து, கண்ணன் அன்பில் தன்னையும் மறந்து, அவ்வளவு ஆழ்ந்திருந்தாள்! என்ன சொல்லுகிறோம் என்ற உணர்ச்சியே அவளுக்கு இல்லை. கண்ணன் காதில் இது விழுந்தது. உடனே அவன், இவள் பொல்லாதவள். என்னையே விற்கப் புறப்பட்டுவிட்டாளே! என்று நகைத்தான். அந்தக் கோபி சென்ற வழியில் கண்ணன் தோன்றி னான். அவளிடம், நான் கோகுல அரசன். எனக்கு வெண்ணெய் தா என்றான். அன்பு மிகுதியால் சில சமயங்களில் குறும்பு செய்யத் தோன்றும். கோபியின் இருதயத்தில் அன்பு ததும்பியிருந்தது. அவள் கண்ணனைக் கோபமூட்டுகிறாள். நீ எப்படி கோகுலத்தின் ராஜா? கோகுலத்தின் அரசன் பலராமனல்லவா? நான் அவனுக்குத்தான் வெண்ணெய் கொடுப்பேன். உனக்குக் கிடையாது. நந்தகோபன் இந்தக் கரிக்கண்ணனை எங்கிருந்துதான் தூக்கி வந்தாரோ! நந்தபாபா எவ்வளவு சிவப்பு? நீ வெறும் கரி! என்று வேண்டுமென்றே சீண்டினாள். கண்ணன் கோபியின் புடைவையைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவள், என்னை விடுடா, நான் போகணுமடா. என் பால், தயிர் எல்லாம் சிந்திக் கொட்டிப் போகும். என் மாமியார் என்னைக் கோபிப்பாள் என்றாள். கண்ணன் விடவில்லை. கோபி ஒரு மோதுமோதி புடைவையை விடுவித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். சற்று தூரம் போய்த் திரும்பிப் பார்த்தாள். கண்ணன் கோபம் கொண்டு நிற்கிறான். அவளுக்குத் தாங்கவில்லை. ஓடிவந்து, உனக்கு வெண்ணெய் கொடுக்கிறேண்டா, கற்கண்டு கொடுக்கிறேன். என் தவறை மன்னித்துவிடப்பா என்கிறாள். கண்ணன், ஒன்றுமே வேண்டாம், போ என்றதும், திரும்பி அவள் புறப்பட்டுச் செல்கிறாள். சற்று தூரம் சென்றதும் கண்ணன் ஒரு கல்லைத் தயிர்ப் பானை மீது எறிந்தான். பானை உடைந்துவிட்டது.
இந்த மாதிரி லீலை வேறு எந்தத் தெய்வமாவது செய்ய முடியுமா? ஸ்ரீகிருஷ்ணன், எல்லோ ருடைய கணவன் என்றும் சொல்லுகிறான். கண்ணன் உடனே வீடு திரும்பி, ரொம்ப அமைதியுடன் யசோதையின் மடியில் ஒளிந்து கொண்டான். சற்று நேரத்தில் அந்த கோபியும் வந்து சேர்ந்தாள். அவள் பாலகிருஷ்ணனைப் பற்றிக் குற்றம் சொன்னாள். குழந்தைக்கு ரொம்பவும் செல்லம் தருகிறீர்கள். அதனால்தான் அவன் இத்தனை வம்பு செய்கிறான். இன்று அவன் என் தயிர்ப் பானையை உடைத்து, என் துணிகளைப் பாழாக்கிவிட்டான். தயிர் கொட்டி வீணாகப் போயிற்று என்றாள். பாலன், அவளைப் போகச் சொல்லு. எனக்குப் பயமாக இருக்கிறது. அவள் போகட்டும், பிறகு நான் உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன் என்றான். பிறகு, அந்த கோபி ஒரு பெரும் லோபி. இரண்டு மூன்று நாளாகப் புளித்து, கெட்டுப் போன பழைய தயிரை விற்க எடுத்து வந்திருந்தாள். அவள் இவ்வளவு மோச மான தயிரை விற்கக் கொண்டு போவது நல்லதா, சொல்லு. யாராவது ஏழை எளியவர் அதை வாங்கிச் சாப்பிட்டு நோய் வந்தால்...? அதற்கா கவே நான் அவள் தயிர்ப் பானையை உடைத் தேன். நான் ஆரோக்கிய பிரசார மண்டலத்தின் தலைவன் அல்லவா....? என்கிறான். யசோதை அந்த கோபியை அழைத்து, இம்மாதிரி கெட்டுப் போன தயிரை விற்கலாமா? என்று கடிந்து அதட்டினாள். கோபி உடனே சிரித்தாள். கிருஷ்ணன் பேச்சில் கை தேர்ந்தவன்தான்! என்றாள். தயிர்ப் பானையை உடைத்தாலும் கிருஷ்ணன் மீது அவள் குறைப்படவில்லை. வழியே போய்க் கொண்டிருக்கும் பெண்ணைப் பிடித்து இழுத்து, தயிர்ப் பானையையும் உடைக்கக்கூடிய வேறு தெய்வம் ஏதேனும் உண்டா? மற்றவர்கள், இம்மாதிரி செய்தால் நமக்கு அடி கிடைக்கும் என்று அஞ்சுவார்கள். யாரும் பூஜை செய்து உபசாரம் செய்ய மாட்டார்கள் என்றும் சொல்வார்கள். ஸ்ரீகிருஷ்ணனுடைய இனிமையான லீலைகள் தெய்விகமானவை. மிக அற்புதமானவை.மற்ற தெய்வங்கள் தங்கள் கையில் அஸ்திர, சஸ்திர, ஆயுதங்கள் ஏந்திக் காட்சி தருகிறார்கள். ஒருவர் கையில் சுதர்சனம் இருக்கிறது. இன்னொருவர் கையில் அம்பும் வில்லும் இருக்கின்றன. மற்றொருவர் கையில் திரிசூலம். கண்ணன் கையில் ஆயுதமே கிடையாது. அவன் ஒரு கையில் புல்லாங்குழலும், ஒரு கையில் வெண்ணையும், கற்கண்டும்தான் வைத் திருக்கிறான். அந்த தெய்வம் நம் அனைவரையும் காக்கட்டும்.
அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு (மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை "கீத கோவிந்தம்'', "ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்பதால்.
திருமண தடை நீங்கும்:
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே இப்பாடலை பாடிய ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் மடியில் கண்ணன் அமர்ந்து பாடல்கள் கேட்பானாம். அதனால் அவர் தொடையை தட்டி தாளம் போடாமல் பாடுவாராம். அத்தகை சிறப்புமிக்க இந்த ஊத்துக்காட்டில் காலிங்க நர்த்தனனாக இருக்கும், கண்ணனை வழிபடுவதன் மூலம் பகையை வெல்லலாம்.
எதிரிகள் அஞ்சிடுவர், நாகதோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும்.இவ்வாலயம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் ஊத்துக்காட்டில் உள்ளது. காம தேனு இறைவனின் அழகை கண்டுகளித்து இசையில் நனைந்த இடமான தேனு சுவாசபுரம் என்று அழைக்கப்பட்ட மூச்சுக்காடு எனும் ஊத்துக்காடு ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ்வாலயம் சென்று வழிபட்டு வரமேன்மை காண்பார்கள்.
கண்ணன் பிறந்த மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யமுனை கரையோரம் கண்ணன் விளையாண்ட கேசியார்ட், கோவர் தனன் ராதை பிறந்த பட்சனா மகாபன் கோகுலம், நந்தி கிராமம் என்ற இடங்களில் மிகவும் பிரமாண்ட முறையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களை அடையலாம்.
பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம்.
information about Bhagwan Shri Krishna
1) Krishna was born 5252 years ago
2) Date of Birth : 18th July,3228 B.C
3) Month : Shravan
4) Day : Ashtami
5) Nakshatra : Rohini
6) Day : Wednesday
7) Time : 00:00 A.M.
8) Shri Krishna lived 125 years, 08 months & 07 days.
9) Date of Death : 18th February 3102BC.
10) When Krishna was 89 years old; the Mega War (Kurukshetra War) took place.
11) He died 36 years after the Kurukshetra War.
12) Kurukshetra War was started on Mrigashira Shukla Ekadashi, BC 3139. i.e "8th December 3139BC" and ended on "25th December, 3139BC".
13) There was a Solar Eclipse between "3p.m to 5p.m on 21st December, 3139BC"; cause of Jayadrath's death.
14) Bhishma died on 2nd February (First Ekadasi of the Uttarayana), in 3138 B.C.
15) Krishna is worshipped as:
(a) Krishna Kanhaiyya : In Mathura
(b) Jagannath : In Odisha
(c) Vithoba : In Maharashtra
(d) Srinath : In Rajasthan
(e) Dwarakadheesh : In Gujarat
(f) Ranchhod: In Gujarat
(g) Krishna : In Udupi, Karnataka
(h) Guruvayurappan : In Kerala
16) Biological Father: Vasudeva
17) Biological Mother: Devaki
18) Adopted Father: Nanda
19) Adopted Mother: Yashoda
20) Elder Brother: Balaram
21) Sister: Subhadra
22) Birth Place: Mathura
23) Wives: Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana
24) Krishna is reported to have Killed only 4 people in his life time.
(i) Chanoora ; the Wrestler
(ii) Kansa ; his Maternal Uncle
(iii) & (iv) Shishupaala and Dantavakra ; his Cousins.
25) Life was not fair to him at all.
His Mother was from Ugra Clan, and Father from Yadava Clan, - an inter-racial marriage.
26) He was born dark-skinned.
He was not named at all throughout his life.
The whole village of Gokul started calling him the black one - Kanha.
He was ridiculed and teased for being black, short and adopted too.
His childhood was wrought with life threatening situations.
27) 'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.
28) He stayed in Vrindavan till 10 years and 8 months.
He killed his own uncle at the age of 10 years and 8 months at Mathura.
He then released his biological mother and father.
29) He never returned to Vrindavan ever again.
30) He had to migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King - Kala Yaavana.
31) He defeated 'Jarasandha' with the help of 'Vainatheya', Tribes on Gomantaka Hill (now Goa).
32) He rebuilt Dwaraka.
33) He then left to Sandipani's Ashram in Ujjain to start his schooling at age 16~18.
34) He had to fight the Pirates from Afrika and rescue his Teacher's son – Punardatta, who was kidnapped near Prabhasa, a sea port in Gujarat.
35) After his education, he came to know about his Cousin's fate of Vanvas.
He came to their rescue in ''Wax house'' and later his Cousin's got married to Draupadi.
His role was immense in this saga.
36) Then, he helped his Cousin's establish "Indraprastha" and their Kingdom.
37) He saved Draupadi from embarrassment.
38) He stood by his Cousin's during their exile.
39) He backed them and guided them to win the "Kurushetra War."*
40) He saw his cherished city, "Dwaraka" washed away.
41) He was killed by a hunter (Jara, by name) in the nearby forest.
42) He never performed any miracles.
His life was not a successful one.
There was not a single moment when he was at peace throughout his life.
At every turn, he had challenges and even more bigger challenges.
43) He faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.
44) He is the only person, who knew the past and future; yet he lived at that present moment, always.
45) He and his life is truly *an example for every human being.
Jai Shri Krishna
Comments
Post a Comment